படம்: https://twitter.com/BJP4India
தமிழ்நாடு

அயோத்தி கோயிலில் நிறுவப்பட்ட ராமர் சிலை

பிரதமர் மோடி ராமர் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியவுடன் அதற்கான சடங்குகளை பிரதமர் மேற்கொண்டார். பிரதமருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் உடனிருந்தார்.

பிரதமர் முன்னிலையில் அனைத்து சடங்குகளும் மேற்கொண்ட பிறகு குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட்டது. பிரதமர் மோடி ராமர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்டோர் ராமர் சிலையைத் தொட்டு வணங்கினார்கள்.