‘பெரியார் விஷன்’ 
தமிழ்நாடு

‘பெரியார் விஷன்’ ஓடிடி தளம்: முதல்வர் வாழ்த்து

யோகேஷ் குமார்

கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி ‘பெரியார் விஷன்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நடிகர் சத்யராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஓடிடி தளத்தை கனிமொழி தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“தந்தை பெரியார் உலகளாவிய மானுடத் தலைவராக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் இன்றைய காலத்தின் தேவையாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தைப் பாராட்டுகிறேன்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக ஊடகங்கள் பெருகி இருக்கக்கூடிய நிலையில், இளைஞர்களிடம் பெரியாரின் கொள்ளைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட முதல் சமூகநீதி ஓடிடி தளம் ‘பெரியார் விஷன்’.

கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளமாகவும் இது இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது” என்றார்.