தமிழ்நாடு

சென்னை மக்களே...: பழைய பொருள்களை அகற்ற புதிய திட்டம்! | Chennai Corporation |

இதற்கெனப் பிரத்யேகமாக அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

கிழக்கு நியூஸ்

பழைய பொருள்களைப் பாதுகாப்பாகச் சேகரித்து அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாலையோரத்தில் பழைய பொருள்களைப் போட்டுச் செல்வது என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. சோஃபா, மேசை, படுக்கை உள்ளிட்ட பழைய பொருள்கள் சாலைகளில் வீசிச் செல்லப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளிலிருக்கும் பழைய பொருள்கள் சென்னை மாநகராட்சி சார்பில் நேரடியாக வீட்டுக்கு வந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் பாதுகாப்பாக எரிக்கப்படுவதை சென்னை மாநகராட்சி உறுதி செய்கிறது. சனிக்கிழமைகளில் மட்டும் இச்சேவை செயல்பாட்டில் இருக்கும். இதற்கெனப் பிரத்யேகமாக அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. தற்போதைய நிலையில் சோஃபா, துணிகள், படுக்கை மற்றும் மரசாமான்களை சென்னை மாநகராட்சி சேகரிக்கிறது.

சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவையைப் பெறுவது எப்படி?

  • 1913 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 9445061913 என்ற வாட்ஸ்ஆப் எண் அல்லது நம்ம சென்னை செயலியில் பதிவு செய்யவும்.

  • உங்கள் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவிக்கப்படும்.

  • உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சோஃபாக்கள், படுக்கைகள், துணிகள் மற்றும் தளபாடங்களை மாநகராட்சி சேகரித்துக்கொள்ளும்.

  • சனிக்கிழமைகளில் மட்டுமே இந்தச் சேவை பயன்பாட்டில் இருக்கும்.

  • சேகரிக்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பாக எரிக்கப்படுவது சென்னை மாநகராட்சியால் உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் சாலையோரங்களில் பழைய பொருள்கள் போடப்படும் நடைமுறை கட்டுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

Chennai Corporation | Greater Chennai Corporation |