கோப்புப் படம் 
தமிழ்நாடு

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து: ஜூன் 1 முதல் அமல்

யோகேஷ் குமார்

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் ஆர்.சி. ரத்து செய்யப்படும், ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும், 25 வயதாகும் வரை அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளதாகவும், அதனால் விபத்துகள் அதுகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, 18 வயதுக்குட்பட்டவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்றும், மேலும் அவர்களுக்கு ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும் என்றும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் அந்த குறிப்பிட்ட நபருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.