தமிழ்நாடு

சென்னை குடிநீர் வாரியம் குறித்த புகார்களுக்குப் புதிய செயலி! | Chennai Metro Water |

உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு. இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி.

கிழக்கு நியூஸ்

சென்னை குடிநீர் வாரியம் பற்றிய குறைகள், புகார்களை விரைவில் தீர்க்க 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய மொபைல் செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"சென்னை குடிநீர் வாரியம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் இடத்தை இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு காணப்படும். இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

Chennai Metro Water | MK Stalin |