கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

கர்நாடக நிலச்சரிவு: நாமக்கல் ஓட்டுநரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கிழக்கு நியூஸ்

கர்நாடக நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணனின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சிரூர் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடந்த 16 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் நாமக்கல்லிலிருந்து எல்பிஜி டேங்கர் லாரியை கர்நாடகத்துக்கு ஓட்டிச் சென்ற இருவர் லாரியுடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தைச் சேர்ந்த சின்னண்ன் (53), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த முருகன் (47) ஆகியோர் இதில் உயிரிழந்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் தலையீட்டுக்குப் பிறகு கர்நாடக அதிகாரிகள் இந்த லாரி மற்றும் லாரியில் சென்றவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இருவரது உடல்களும் ஏற்கெனவே மீட்கப்பட்டன.

சரவணனின் உடல் மட்டும் மீட்கப்படாமல் இருந்த நிலையில், இவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவருடைய உடலானது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உடலானது கர்நாடகத்திலிருந்து சிறப்பு வாகனம் மூலம் நாமக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது. கர்நாடக அரசு சார்பில் சரவணனின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அர்ஜுனின் உடல் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இவர்களுடைய உடலைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.