21 குண்டுகள் முழங்க நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜின் உடல் தகனம் 
தமிழ்நாடு

21 குண்டுகள் முழங்க நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜின் உடல் தகனம்

யோகேஷ் குமார்

நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ், நாகப்பட்டினம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். 1989, 1996, 1998, 2019 ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்று, எம்.பி. ஆனார்.

திருவாரூரைச் சேர்ந்த செல்வராஜ், 1957-ல் பிறந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, இதயப் பிரச்னை காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, செல்வராஜ் காலமானார்.

இந்நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், செல்வராஜின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.