சென்னை கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 2.85 கோடி செலவில் "கோ-ஒர்கிங் ஸ்பேஸ்" மற்றும் மாணவர்களுக்கான "படிப்பகம்" என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
முதல்வர் படைப்பகத்தில் உள்ள அம்சங்கள் என்ன?
முதல்வர் படைப்பகத்தில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், இங்கு வந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப் போட்டித் தேர்வுக்கானப் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும் நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.
இங்கு ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது.
போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 3 கலந்தாய்வு கூடங்களும் அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும் ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும் உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும் என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டண விவரம்:
கோ-ஒர்கிங் ஸ்பேஸ்:
நேரம்:
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை
அரை நாள் கட்டணம்: ரூ. 50
முழு நாள் கட்டணம்: ரூ. 100
மாதக் கட்டணம்: ரூ. 2,500
கலந்தாய்வுக் கூடம் 1:
நேரம்:
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 150
கலந்தாய்வுக் கூடம் 2:
நேரம்:
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 150
கலந்தாய்வுக் கூடம் 3:
நேரம்:
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
ஒரு மணி நேரக் கட்டணம்: ரூ. 250
படிப்பகம்:
நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
ஒரு நபருக்கு: ரூ. 5
முதல் பிரிவு: காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை
இரண்டாவது பிரிவு: காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
மூன்றாவது பிரிவு: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை
நான்காவது பிரிவு: மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை
ஐந்தாவது பிரிவு: இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை