கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவுக்கு ஒரே பயணச்சீட்டு: விரைவில் அமல்

யோகேஷ் குமார்

சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கென பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் உட்பட பல போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் மக்கள் தனி தனியாக பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவை அனைத்தும் ஒரே பயணச்சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் ஒரே பயணச்சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே, ஒரே பயணச்சீட்டைப் பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸை (Pass) அறிமுகப்படுத்தி அந்த கார்டை பொதுமக்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் ஜூன் 2-ம் வாரத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.