https://www.linkedin.com/in/chinnaiyan-soundararajan-97abb6235/
தமிழ்நாடு

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடைநீக்கம்! | Madras Veterinary College

மேலும் 5 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ. 5 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்தக் கல்லூரியின் முதல்வராக சௌந்தரராஜன் இருந்தார்.

இவருடைய பதவிக்காலத்தில் கல்லூரிக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் சார்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக் குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரி நிர்வாகிகள் ரூ. 5 கோடிக்கும் மேல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணைக் குழுவுக்குப் பல்கலைக்கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்புடைய முழுமையான விவரம் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

Madras Veterinary College | Dean | Madras Veterinary College Dean | C. Soundararajan