திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை 
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை | Thiruparankundram |

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது அரசு அதிகாரிகள் தங்கள் வாதிக்காக உருவாக்கிய கற்பனையான அம்சம்...

கிழக்கு நியூஸ்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இதனை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமச்சந்திரன் அகியோர் விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தனர்.

அதன்படி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுள்ளது.

தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதிகள் கூறியதாவது:-

  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டுள்ளது.

  • கார்த்திகை தீபத் திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

  • திருப்பரங்குன்றம் மலையின் மேல் இருப்பது தீபத்தூண் தான்.

  • தீபத்தூணில் கோயில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும்.

  • தீபம் ஏற்றும் நிகழ்வை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை செய்ய வேண்டும்.

  • திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்ற வதம் சிறுபிள்ளைத்தனமானது.

  • திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதிக்கு சீர்குலைக்கும் என்ற வாதம் அபத்தமானது.

  • திருப்பரங்குன்றம் மலையில் மிக உயரத்தில் இருக்கும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நியாயமானது.

  • திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை நிராகரிக்க தேவஸ்தானம் கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.

  • திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணமாக இருக்க வேண்டும்.

  • திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணமாக இருக்க வேண்டும்.

  • திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது அரசு அதிகாரிகள் தங்கள் வாதிக்காக உருவாக்கிய கற்பனையான அம்சம்.

  • தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு முந்தைய தீர்ப்புகளைப் பாதிக்கவில்லை.

  • திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்கவில்லை.

  • அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் நிலைக்குச் செல்லக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.

The Madras High Court Madurai Bench has upheld the order issued by single judge Justice G.R. Swaminathan in the Thiruparankundram case, and dismissed the petition filed by the Tamil Nadu government against it.