அரபிக் கடலில் அடுத்த 12 மனி நேரத்திலும், வங்கக் கடலில் அக்.22 அன்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் அரபிக் கடலில் அடுத்த 12 மனி நேரத்திலும், வங்கக் கடலில் அக். 22 அன்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், வட மேற்கு திசையை நோக்கி நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளதாவது:
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது வலுவிழந்த நிலையிலேயே நீடிக்கும் என்பதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது. எனவே, வடக்கு அந்தமான் அருகே இந்தோ - சீனாவிலிருந்து அடுத்த வாரம் வரக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.