தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

அடுத்த இரு நாள்களில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 23 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வங்கக் கடலில் மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். அதே வேளையில் அடுத்த இரு நாள்களில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, நவம்பர் 25 அன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய மழை எச்சரிக்கை:

மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.