10.1 கி.மீ. - கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் - ஜி.டி. நாயுடு மேம்பாலம்
இந்தப் பாலம் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. நீளம் கொண்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மேம்பாலத்தை இன்று காலை திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலம் இதுதான்.
7.8 கி.மீ. - சேலம் ஈரடுக்கு மேம்பாலம்
சேலத்தில் பல்வேறு முக்கியச் சந்திப்புகளை இணைக்கும் இந்த மேம்பாலம் 7.8 கி.மீ. நீளம் கொண்டது. இத்திட்டத்துக்கு 2015-ல் அனுமதி வழங்கப்பட்டது.
7.3 கி.மீ. - மதுரை - நத்தம் மேம்பாலம்
தேசிய நெடுஞ்சாலையால் கட்டப்பட்ட இம்மேம்பாலம் 7.3 கி.மீ. தூரத்துக்கு மதுரை மற்றும் நத்தத்தை இணைக்கிறது.
2.3 கி.மீ. - அன்னை இந்திரா காந்தி சாலை மேம்பாலம்
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் தீவை இணைக்கும் இந்தச் சாலை மேம்பாலம் 2.34 கி.மீ. நீளம் கொண்டது. இது 1988-ல் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
2.3 கி.மீ - சென்னை மேடவாக்கம் - தாம்பரம்
தாம்பரம் - வேளச்சேரி இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேடவாக்கம் மற்றும் தாம்பரம் இடையே 2.3 கி.மீ. தூரத்துக்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
1.6 கி.மீ. - சென்னை விமான நிலைய மேம்பாலம்
சென்னை விமான நிலையம் முன் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 1.6 கி.மீ. 2008-ல் தொடங்கப்பட்டது.
மேலும் சில நீண்ட மேம்பாலங்கள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வரவுள்ளன. சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான மேம்பாலம் 20.1 கி.மீ. தூரம் கொண்டது. இது கட்டுமானப் பணியில் உள்ளது. திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச்சாலை கொண்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
GD Naidu Bridge | Longest Bridges |