தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் மொத்தம் 229 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 129 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் புதுச்சேரி, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் 35 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு அதற்குத் முழு ஆதரவை அளித்திருந்தார் பிரேமலதா.