எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் கல்லூரியில் ஐ.டி. சோதனை

இந்தக் கல்வி நிறுவனம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவனுக்குச் சொந்தமானது.

கிழக்கு நியூஸ்

திருச்சி மாவட்டம் முசிறியில் செயல்பட்டு வரும் எம்ஐடி கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

எம்ஐடி கல்வி நிறுவனம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பிஎட் கல்லூரி, வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை திருச்சி மாவட்டம் முசிறியில் நடத்தி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவனுக்குச் சொந்தமானது. இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுவார். இருவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

வருமான வரித் துறையினர் தங்களுக்குக் கிடைத்த சில தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின்போது, கல்வி நிறுவன வளாகங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.