24 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் கடலோர காவல் படை எஸ்.பி. டி.என். ஹரி கிரண் பிரசாத் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும், சென்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. புக்யா சினேகா பிரியா சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
என்.எஸ். நிஷா ஐபிஎஸ் நிலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், கே. கார்த்திகேயன் ஐபிஎஸ் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், ஆதர்ஷ் பச்சேரா பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், ஷ்ரேயா குப்தா ஐபிஎஸ் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், கௌதம் கோயல் ஐபிஎஸ் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருண் கபிலன் ஐபிஎஸ் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், ஃபெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், டி. கண்ணன் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், ஜி. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், கே. பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், வி.ஆர். சரவணன் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், என். மதிவாணன் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ். மேகலினா இடென் ஐபிஎஸ் சென்னை காவல்துறை தலைமையகத்தில் துணை ஆணையராகவும், வீ.வீ. கீதாஞ்சலி ஐபிஎஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், டி. ரமேஷ் பாபு ஐபிஎஸ் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.