https://twitter.com/PiyushGoyalOffc
தமிழ்நாடு

இந்தியாவின் பலம் மாநிலங்களிடம் உள்ளது: பியூஷ் கோயல்

கிழக்கு நியூஸ்

இந்தியாவின் பலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருநாள்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டார்கள். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

"இந்தியாவின் பலம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ளது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்கிற லட்சிய இலக்கைத் தமிழ்நாடு கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்ல அரசுக்கும், தொழில் துறை தலைவர்கள் மற்றும் மக்களுக்கு வாழ்த்துகள்.

மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால்தான் இந்தியா வளர்ச்சியடையும், நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பங்களிப்பு தேவை எனப் பிரதமர் வழிகாட்டியுள்ளார். பிரதமருடைய மனதில் தமிழ்நாட்டுக்கு என்றும் முக்கியமான ஓர் இடம் உண்டு" என்றார் அவர்.