கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன: இபிஎஸ்

கிழக்கு நியூஸ்

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், 19 உணவகங்கள் மூடப்பட்டுவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை. அம்மா உணவகத்துக்கு தரமான பொருள்கள் கொடுக்கப்படவில்லை. இதனால், தரமான உணவைத் தயாரிக்க முடியாததால், அம்மா உணவகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.

அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பாதியளவு குறைக்கப்பட்டார்கள். சென்னையில் சுமார் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சியில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

முதல்வர் அம்மா உணவகத்துக்குச் சென்று ஆய்வு செய்வதாக உணவை அருந்தி சோதனை செய்திருக்கிறார். இந்தச் சோதனையை மூன்றாண்டுகளாக ஏன் செய்யவில்லை. திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. அம்மா உணவகம் ஏழை மக்களின் வரப்பிரசாதம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.