18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிப்பு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Rain Alert |

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு எனக் கணிப்பு.

கிழக்கு நியூஸ்

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது வலுவிழந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்த நிலையில், சென்னையை ஒட்டி இது கரையைக் கடந்தது. இது கரையைக் கடந்தாலும், மழைக்கான எச்சரிக்கை விலகவில்லை.

டிசம்பர் 3

ஆரஞ்சு நிற எச்சரிக்கை - மிகக் கனமழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை (மலைப் பகுதிகள்).

மஞ்சள் நிற எச்சரிக்கை - கனமழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுச்சேரி.

டிசம்பர் 4

கனமழை - மஞ்சள் நிற எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி.

Rain Alert | Chennai Rain | Chennai Rains | IMD Chennai | RMC Chennai |