@chennaicorp
தமிழ்நாடு

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ. 18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வருகிறது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், விதிகளை மீறி பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ. 18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ. 2.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.