ANI
தமிழ்நாடு

உச்சத்தில் தங்கத்தின் விலை!

இந்த மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,500 உயர்ந்துள்ளது.

கிழக்கு நியூஸ்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அண்மையில் ஏறுமுகமாக உள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் உலகச் சந்தையில் தங்கத்தின் முதலீடு அதிகரித்திருப்பது போன்றவை இதற்கான காரணமாக கூறப்படுகின்றன.

ஏற்கெனவே ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 60,000-த்தைத் தாண்டிய நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (ஜன.29), ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 680 உயர்ந்து, ரூ. 60,760 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 85 உயர்ந்து, ரூ. 7,595 ஆக விற்பனையாகிறது.

இந்த மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,500 உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 61,000-த்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றே நிபுணர்கள் கணிக்கிறார்கள்.