மாதிரி படம் 
தமிழ்நாடு

சென்னை: தனியார் பள்ளியில் வாயுக் கசிவால் மாணவர்கள் பாதிப்பு

"வாயுக் கசிவானது பள்ளியிலுள்ள ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டதாகத் தகவல் இல்லை."

கிழக்கு நியூஸ்

சென்னை திருவொற்றியூர் அருகே தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதால், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை திருவொற்றியூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் ஆய்வகத்திலிருந்து வாயு கசிந்ததாகத் தெரிகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 3 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வாயுக் கசிவு குறித்து ஆய்வு செய்வதற்காக தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலும் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சகாயராணியும் பள்ளிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு, வண்ணாரப்பேட்டை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாயுக் கசிவானது பள்ளியிலுள்ள ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றார். மேலும், மூன்றாவது தளத்திலுள்ள மாணவர்களுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.