ANI
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்

காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கக்கூடும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

கிழக்கு நியூஸ்

வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்னும் சற்று நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் காலை அறிவித்தது. மேலும், இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டது. புயல் கரையைக் கடக்கும்போது, பலத்த காற்றானது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்குப் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெஞ்சல் என சௌதி அரேபியா பெயர் சூட்டியுள்ளது.

முன்னதாக, இந்தப் புயல் நமக்கு நிறைய மழையைத் தரப்போவதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.