படம்: https://x.com/CollectorErode
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

ஜனவரி 17 வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

கிழக்கு நியூஸ்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா. இவர் மறைவைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14-ல் காலமானார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 8 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. ஜனவரி 17 வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜனவரி 18 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாள்.