ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைக் காப்பாற்றியது பாஜகதான் என்ற நன்றியை மறந்துவிடக் கூடாது என்று பேசினார்.
சென்னை வடபழநியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்படி பழனிசாமி நேற்று (செப்15) உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது -
“சிலர் கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த கைக்கூலிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் அவர்களுக்கு முடிவு கட்டுவோம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சிலர் கட்சியையும் ஆட்சியையும் கவிழ்க்க முயற்சித்தார்கள். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றியவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். மத்தியில் உள்ளவர்கள் எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே எங்களுக்கு முக்கியம்.
எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார். உட்கட்சி பிரச்னையை தீர்ப்பதற்காக செல்கிறார் என்று சொல்லும் பத்திரிகைக்காரர்களே, அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம் தான் எங்களுக்கு முக்கியம். ஒரு முள் இம்மை அளவு கூட நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
ஆதிமுக தலைமைக் கழகத்தை உடைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்ப்பது? தலைமைக் கழகம் தொண்டர்களின் சொத்து. 18 எம்எல்ஏக்களை கடத்தி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. மத்தியில் உள்ளவர்கள் என்னை மிரட்ட முடியாது.
இப்போது சொல்கிறேன், அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி மத்தியில் இருப்பவர்கள் எந்தவித அச்சுறுத்தலும் வழங்கவில்லை. அதிமுகவுக்கு நன்மைதான் செய்தார்கள்.
இவ்வாறு பேசினார்.
Edappadi Palaiswami | EPS | Jayalalitha | BJP | ADMK |