தமிழ்நாடு

அண்ணாமலை தோற்றால் மொட்டை அடிப்பேன்: சொன்னதைச் செய்த பாஜக தொண்டர்

யோகேஷ் குமார்

கோவையில் அண்ணாமலை தோல்வி அடைந்தால் மொட்டை அடித்துக் கொள்வதாக பந்தயம் கட்டிய பாஜக தொண்டர், நடுரோட்டில் மொட்டை அடித்துக்கொள்ளும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், “கோவையில் அண்ணாமலை தோல்வி அடைந்தால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுகிறேன்” என தனது நண்பர்களுடன் பந்தயம் கட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கோவையில் அண்ணாமலை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர், நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடித்து கொண்டு மீசையையையும் மழித்துக் கொண்டார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.