தமிழ்நாடு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி எனும் பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ, தமிழ்நாட்டின் அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இவர் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தின் மூலம், தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி எனும் பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.

அர்ச்சனா பட்நாயக் 2002-ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஆட்சியராக இருந்துள்ளார். இதுதவிர தோட்டக்கலைத் துறை ஆணையர் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் முதல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக உள்ளார்.