ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகத் தகவல் @arjaffersadiq
தமிழ்நாடு

பணமோசடி வழக்கு: ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் 3,500 கிலோ போதைப் பொருள்களைக் கடத்தியுள்ளதாகவும், இவருக்கு தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை அரசியலிலும் முதலீடு செய்துள்ளதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.