விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  @Vijayabaskarofl
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

யோகேஷ் குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 2021-ல் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.