படம்: https://twitter.com/Udhaystalin
தமிழ்நாடு

திமுக இளைஞரணி மாநாடு தொடங்கியது

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

கிழக்கு நியூஸ்

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாடு சேலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்கள்.

மாநாட்டின் முகப்பில் 100 அடிக்குக் கட்சிக் கொடி அமைக்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இந்தக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் மு. கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோரது சிலைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மாரியாதை செலுத்தினார். முதல்வர் முன்னிலையில் எம்எல்ஏ எழிலரசன் மாநாட்டுத் திடலைத் திறந்துவைத்தார்.

இதனிடையே இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளித்து வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்தார்.