தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
தவெகவின் 2-வது மாநில மாநாடு திட்டமிட்டதற்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு முன்கூட்டியே தொடங்கியது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது,
`முதல்வர் ஸ்டாலினும், அவரது திமுகவும் அண்ணாவின் குறிக்கோளில் இருந்து விலகிவிட்டனர். யாரால் அண்ணாவின் குறிக்கோளை கடைபிடிக்க முடியும் என்றால், அது எங்களுடைய தலைவர் விஜயால் மட்டும்தான். திமுகவிற்கும், தவெகவிற்கும் கொள்கை ஒன்றுதான் என அனைவரும் கூறலாம்.
ஆனால் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் ஏழ்மையை ஒழிக்கவேண்டும், சமத்துவத்தை உருவாக்கவேண்டும் என்றுதான் கட்சி தொடங்கினார்கள். அண்ணா கொள்கையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விலகிவிட்டார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து தடம்புரண்டு இன்றைக்கு பாஜகவுடன் உறவு வைத்துக்கொண்டு தமிழகத்தில் பாஜகவை பின்புறவாசல் வழியாக அதிகாரத்தை அடைய வைக்கும் அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்கிறது’ என்றார்.