தேர்தல் அறிக்கையுடன் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!  @mkstalin
தமிழ்நாடு

தேர்தல் அறிக்கையுடன் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையுடன், திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்:

வடசென்னை- கலாநிதி வீராசாமி

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் - டிஆர். பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை

ஆரணி - தரணி வேந்தன்

வேலூர்- கதிர் ஆனந்த்

தருமபுரி- ஆ. மணி

பெரம்பலூர் - அருண் நேரு

கள்ளக்குறிச்சி - மலையரசன்

தஞ்சாவூர்- முரசொலி

ஈரோடு - பிரகாஷ்

சேலம் - செல்வகணபதி

நீலகிரி - ஆ. ராசா

கோவை - கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி

தேனி- தங்க தமிழ்செல்வன்

தென்காசி- ராணி ஶ்ரீகுமார்

தூத்துக்குடி - கனிமொழி

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 500, பெட்ரோல் விலை 75- ஆகவும் மற்றும் டீசல் விலை ரூ 65- ஆகவும் குறைக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறப்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்.

ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

புதிய கல்விக்கொள்கை இரத்து செய்யப்படும்.

நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஆளுநர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்.

ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.

உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் இரத்து செய்யப்படும்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட நாட்கள் 100- லிருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் ரூ. 400 ஆகவும் உயர்த்தப்படும்.

ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.

பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

மாணவர்களுக்கு ரூ. 4 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மேம்பாடு குறித்த 'சச்சார்' கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

சென்னையில் 3- வது இரயில் முனையம் அமைக்கப்படும்.

இரயில் கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.

ஒன்றிய அரசு அமைப்புகள் தன்னாட்சியுடன் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

இரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை.

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும், வட்டியும் முழுமையாக இரத்து செய்யப்படும்.

துணை வேந்தர்கள் நியமனங்களை இனி மாநில அரசுகளே மேற்கொள்ள சட்டத்திருத்தம்.

கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒரு ஜி.பி அளவில் கட்டணமில்லா இலவச சிம் கார்டு.

மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வை-பை.

எளியோர் பயணம் செய்ய ஏதுவாக விமான கட்டண நிர்ணயம்.

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை.

கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.

கல்வி (ம) சுகாதாரத் துறைகள் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.

மாநில கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகளும் இரத்து.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.

ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டங்களுக்கு நிதி இரட்டிப்பு.

தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்.

இந்தியா முழுவதும் நான் முதல்வன் - புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படும்.

காவிரி, தாமிரபரணி, வைகை ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்படும்.

யுபிஎஸ்சி தேர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க குழு.