அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்) DMK IT Wing
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்?: முழு பட்டியல் | DMK Alliance | TN Elections |

காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, இ.கம்யூனிஸ்ட் 5, ம. கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4...

கிழக்கு நியூஸ்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை களம் காணுகின்றன. திமுக கூட்டணிக்குள் பல நாளாக இழுபறியில் நீடித்த கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு தொகுதிகள்

ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, மதிமுக 4, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் தாங்கள் போட்டியிட விருப்பமான தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கிய நிலையில், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கு பிறகு எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

காங்கிரஸ்

  1. பொன்னேரி (தனி)

  2. திருபெரும்புதூர் (தனி)

  3. சோளிங்கர்

  4. உதகமண்டலம்

  5. ஈரோடு கிழக்கு

  6. அறந்தாங்கி

  7. கடலூர்

  8. மயிலாடுதுறை

  9. காரைக்குடி

  10. சிவகாசி

  11. திருவாடனை

  12. திருவைகுண்டம்

  13. நாங்குநேரி

  14. குளச்சல்

  15. விளவங்கோடு

  16. கிள்ளியூர்

  17. வேளச்சேரி

  18. ஊத்தங்கரை (தனி)

  19. துறையூர் (தனி)

  20. கவுண்டம்பாளையம்

  21. ஆத்தூர் (தனி)

  22. பென்னாகரம்

  23. சிங்காநல்லூர்

  24. அம்பாசமுத்திரம்

  25. கிருஷ்ணகிரி

  26. உசிலம்பட்டி

  27. சங்கரன்கோவில்

  28. மேலூர்

தேமுதிக

  1. விருத்தாசலம்

  2. விருதுநகர்

  3. தருமபுரி

  4. குடியாத்தம் (தனி)

  5. சேலம் மேற்கு

  6. போளூர்

  7. பல்லாவரம்

  8. திருத்தணி

  9. ஓமலூர்

  10. மைலம்

விடுதலை சிறுத்தைகள்

  1. காட்டுமன்னார்கோவில் (தனி)

  2. செய்யூர் (தனி)

  3. திருப்போரூர்

  4. அரக்கோணம் (தனி)

  5. திண்டிவனம் (தனி)

  6. பெரியகுளம் (தனி)

  7. கள்ளக்குறிச்சி (தனி)

  8. பண்ருட்டி

இந்திய கம்யூனிஸ்ட்

  1. தளி

  2. திருத்துறைப்பூண்டி (தனி)

  3. திருவில்லிப்புத்தூர் (தனி)

  4. திருப்பூர் வடக்கு

  5. பவானிசாகர் (தனி)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

  1. கீழ்வேளூர் (தனி)

  2. கந்தர்வக்கோட்டை (தனி)

  3. பத்மநாபபுரம்

  4. பழனி

  5. திருவொற்றியூர்

மதிமுக

  1. மொடக்குறிச்சி

  2. மதுரை தெற்கு

  3. கடையநல்லூர்

  4. சீர்காழி (தனி) - தனிச்சின்னம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

  1. பாபநாசம்

  2. வாணியம்பாடி

கொமதேக - உதய சூரியன்

  1. திருச்செங்கோடு

  2. பொள்ளாச்சி

மமக - உதய சூரியன்

  1. நாகை

  2. மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை - உதய சூரியன்

  1. சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி - உதய சூரியன்

  1. சிதம்பரம்

எஸ்.டி.பி.ஐ - உதய சூரியன்

  1. நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி - உதய சூரியன்

  1. நத்தம்

என 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

The list of seats allocated to the parties in the DMK alliance has been released.