தமிழ்நாடு

தமிழ்நாட்டின் 221 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம்!

ராம் அப்பண்ணசாமி

18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியானது. இதில் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றிபெற்றது.

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு விவரங்களை 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவற்றில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.

மீதமிருக்கும் 13 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளிலும், பாமக 3 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் முதல் இடங்களைப் பெற்றுள்ளன. விவரங்கள் பின்வருமாறு:

அதிமுக முதலிடம் பிடித்த 8 சட்டமன்றத் தொகுதிகள்:

சேலம் மாவட்டம் – எடப்பாடி, சங்ககிரி

நாமக்கல் மாவட்டம் - குமாரபாளையம், பரமத்திவேலூர்

அரியலூர் மாவட்டம் - அரியலூர், ஜெயங்கொண்டம்

விழுப்புரம் மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை

பாமக முதலிடம் பிடித்த 3 சட்டமன்றத் தொகுதிகள்:

தருமபுரி மாவட்டம் - தருமபுரி, பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி

தேமுதிக முதலிடம் பிடித்த 2 சட்டமன்றத் தொகுதிகள்:

விருதுநகர் மாவட்டம் - திருமங்கலம், அருப்புக்கோட்டை

18வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையில் இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது.