முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிஹார் வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்.தான் காரணம்: திண்டுக்கல் சீனிவாசன் | Special Intensive Revision |

நிதீஷ் குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்...

கிழக்கு நியூஸ்

பிஹார் தேர்தல் வெற்றிக்கு சிறப்பு தீவிர திருத்தம்தான் காரணம் என்று கூறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிதீஷ் குமாரைப்போல் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று பேசியுள்ளர்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

“பிஹார் தேர்தல் அப்படியே நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சர் ஆவார். பிஹாரின் நிதீஷ் குமார் போல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் எதிர்க்க வேண்டியது எதுவுமே இல்லை. இது அடிக்கடி நடப்பதுதான். ஒவ்வொரு 5,10 ஆண்டுகளுக்கு இப்பணிகள் நடக்கும். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் திமுகவினர்தான் நிற்கிறார்கள். பின் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இது அனைவரின் உரிமை. ஏன் திமுக நடுங்குகிறார்கள், ஏன் ஸ்டாலின் நடுங்குகிறார் என்றே தெரியவில்லை. புலி வாலைப் பிடித்துக் கொண்டு விட முடியாதது போல் தவிக்கிறார்கள். மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.

அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கொடுத்தால் அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும். அதைக் கொடுக்காமல் வேலை மட்டும் வாங்குவது சரியல்ல. அதனை அரசு ஊழியர்கள் புறக்கணிப்பது சரியானதுதான். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் திண்டுக்கல் தொகுதியிலேயே சுமார் 40,000 - 50,000 வாக்குகள் குறையும். அவை எல்லாம் போலி வாக்குகள், இறந்தவர்களின் வாக்குகள். இவர்களின் வாக்குகளை எல்லாம் நீக்கி, சரியான வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செய்யும். பிஹார் வெற்றிக்குக் காரணமே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்தான்.” என்றார்.

Former minister Dindigul Srinivasan said Bihar election victory is because of SIR and Edappadi Palaniswami will become the Chief Minister of Tamil Nadu, like Nitish Kumar.