தமிழ்நாடு

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி

பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

கிழக்கு நியூஸ்

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது.

விருதுநகரில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் அத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்

விருதுநகர் - விஜய பிரபாகர்

மத்திய சென்னை - பார்த்தசாரதி

திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி

கடலூர் - சிவக்கொழுந்து

தஞ்சாவூர் - சிவநேசன்

இவர்களில் பார்த்தசாரதி, நல்லதம்பி, சிவக்கொழுந்து ஆகியோர் முன்னாள் எம்எல்ஏக்கள்.