தமிழ்நாடு

பொங்கல்: சென்னையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்?

1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு நான்கு பேருந்து முனையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் ஜனவரி 13 வரை 5,736 சிறப்புப் பேருந்துகள் மொத்தம் 14,104 பேருந்துகள் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. பிற ஊர்களிலிருந்து 7,800 சிறப்புப் பேருந்துகள் உள்பட 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு நான்கு பேருந்து முனையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

கிளாம்பாக்கம் (வெளியூர் செல்வதற்கான பேருந்து முனையம்)

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

கிளாம்பாக்கம் (மாநகர் பேருந்து முனையம்)

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்