ANI
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!

விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும்...

யோகேஷ் குமார்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து இணையத்தில் பார்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.