படம் - instagram.com/ridersharmila4360/
தமிழ்நாடு

காவலர் குறித்து அவதூறு: பிரபல ஓட்டுநர் சர்மிளா மீது வழக்குப்பதிவு

கோவையைச் சேர்ந்த பிரபல ஓட்டுநர் சர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

கோவையைச் சேர்ந்த பிரபல ஓட்டுநர் சர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சர்மிளா, தனியார் பேருந்தை இயக்கி, அதிகக் கவனம் பெற்றார். சில சர்ச்சைகளிலும் அடிபட்டார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தொழில் தொடங்குவதற்காக சர்மிளாவுக்கு கார் வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோவையில் காரில் அமர்ந்தபடி செல்போனில் படம்பிடித்து சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதன் காணொளியைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதையடுத்து அந்தக் காணொளியின் அடிப்படையில் சர்மிளா மீது சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.