ANI
தமிழ்நாடு

நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைப்பு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 23-ல் நாடு முழுவதும் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஜூன் 22-ல் அறிவித்தது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு:

UGC அமைப்பு நடத்தும் NET தேர்வு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, நீட் முதுகலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான மருத்துவர்களைக் கடும் விரக்தியில் தள்ளியுள்ளது. இந்த சம்பவங்களை நாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது, இவை திறனற்ற மற்றும் உடைந்துபோன மத்திய தேர்வு முறை என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் இறுதி ஆணிகள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

இந்த மோசடி கட்டவிழ்க்கப்படும் நேரத்தில், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க (கீழ்கண்டவற்றை அடைய) நாம் கைகோர்ப்போம்.

-      தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு முறையைக் கட்டமைக்கவும்

-      பள்ளிக் கல்வியின் முதன்மை நிலையை உறுதி செய்யது அதை தொழில்முறைக்கான அடிப்படையாக மாற்றுவதற்காகவும்

-      தொழில்முறை படிப்புகளுக்கான சேர்க்கைத் தேர்வுகளில் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும்

-      மிக முக்கியமாக நம் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை மீண்டும் நிறுவுவதற்காகவும்.