பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையாக தலா ரூ. 25 லட்சம் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் மே 13 அன்று தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதைத் தாண்டி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையாக தலா ரூ. 25 லட்சம் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: