தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் புதிய ரயில் பாதை பணி: ரயில்கள் சேவையில் மாற்றம்!

20 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை பணி நடைபெறுவதை ஒட்டி பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்கள் சேவையில் மாற்றம் செய்து, இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாளை (08-03-2025) இரவு 8.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து கிளம்பும், திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் (20606), தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை மறுநாள் (09-03-2025) காலை 5.35 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கிளம்பும், புதுச்சேரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16116), செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை மறுநாள் (09-03-2025) காலை 5.40 மணிக்கு காரைக்குடியில் இருந்து கிளம்பும், பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை மறுநாள் (09-03-2025) காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பும், திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666), மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை மறுநாள் (09-03-2025) காலை 6.45 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும், வைகை அதிவிரைவு ரயில் (12636), தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை மறுநாள் (09-03-2025) காலை 10.20 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்ப இருந்த குருவாயூர் விரைவு ரயில் (16127), தாம்பரத்தில் இருந்து 10.50 மணிக்குக் கிளம்பும்.

நாளை மறுநாள் (09-03-2025) பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்ப இருந்த வைகை அதிவிரைவு ரயில் (12635), தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குக் கிளம்பும்.

நாளை மறுநாள் (09-03-2025) பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்ப இருந்த திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் (20665), மாம்பலத்தில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்குக் கிளம்பும்.

நாளை மறுநாள் (09-03-2025) பிற்பகல் 3.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்ப இருந்த பல்லவன் அதிவிரைவு ரயில் (12605), தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்குக் கிளம்பும்.

நாளை மறுநாள் (09-03-2025) மாலை 4.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்ப இருந்த சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் (20605), தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்குக் கிளம்பும்.

நாளை மறுநாள் (09-03-2025) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்ப இருந்த தாம்பரம் – ஹைதராபாத் சார்மினார் அதிவிரைவு ரயில் (12759), சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்குக் கிளம்பும்.