கோப்புப்படம் 
தமிழ்நாடு

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! | TVK Vijay |

சென்னையிலுள்ள அமெரிக்க மற்றும் இலங்கை தூதரகங்களுக்கும் இதே மிரட்டல் வந்துள்ளதாகச் செய்திகளில் கூறப்படுகின்றன.

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக விசாரிக்க ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திக்காமல் விஜய் சென்னை திரும்பியது விமர்சனத்துக்குள்ளானது. அரசியல் தலைவர்கள் பலரும் கரூர் அரசு மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. மர்ம நபர் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் விஜய் வீட்டுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது வந்துள்ள மிரட்டலைத் தொடர்ந்து, சோதனைக்காக விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையிலுள்ள அமெரிக்க மற்றும் இலங்கை தூதரகங்களுக்கும் இதே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகச் செய்திகளில் கூறப்படுகின்றன.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜயின் வீட்டுக்கு ஏற்கெனவே பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Vijay | Bomb Threat |