கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

நாடாளுமன்றத்தில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்: திமுக எம்.பி. டி.ஆர். பாலு அறிவிப்பு

"தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்."

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியுதவி, வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக பொருளாளரும், திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழநாட்டுக்குப் புயல் வெள்ள நிவாரண நிதியுதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து பிப்ரவரி 8-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக சார்பில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்."