கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சங்கி என்றால் என்ன?: வானதி சீனிவாசன் விளக்கம்

கிழக்கு நியூஸ்

நாட்டை நேசிக்கின்றவர்களும், நாட்டு நலன்களில் சமரசம் செய்துகொள்ளாதவர்களும் சங்கி என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று அழைக்கும்போது தனக்குக் கோபம் வரும் என்று லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் இயக்குநரும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சங்கி என்ற சொல் பேசுபொருளானது.

ரஜினியும் சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் சங்கி என்ற சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளார்.

"சங்கி என்பதை எதிர் கருத்து வைத்திருக்கக்கூடியவர்கள், எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக இருக்கக்கூடியவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட பதமாக இழிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சங்கி என்பதற்குப் பெருமைகொள்வதாகவும் கூறுகிறார்கள்.

எங்களைக் கேட்டால் நாட்டை நேசிக்கின்ற, நாட்டு நலன்களில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று சொல்வதில் பெருமை" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என அனைவரிடமும் ஆதரவு கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.