பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு ANI
தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை போட்டி

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

யோகேஷ் குமார்

தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. கோவையில் அண்ணாமலையும் தென்சென்னையில் தமிழிசையும் போட்டியிடுகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

கோவை - அண்ணாமலை

தென்சென்னை - தமிழிசை

கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

நீலகிரி - எல். முருகன்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

மத்திய சென்னை - வினோஜ் செல்வம்

வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)

கிருஷ்ணகிரி - நரசிம்மன்

பெரம்பலூர் - பாரிவேந்தர்