கோவையில் அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல்
கோவையில் அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் @annamalai_k
தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல்

யோகேஷ் குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். எனவே கோவையில் திமுக, அதிமுக, பாஜக இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று அண்ணாமலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அப்போது அவருடன் வானதி சீனிவாசன் உட்பட பாஜக முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் இருந்தனர்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

“கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த வளர்ச்சியும், மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவதும், கோவையின் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதும் எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி, 400 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தொகுதி பொதுமக்களும், கட்சி வேறுபாடின்றி, நமது பாரதப் பிரதமருக்குத் தங்கள் ஆதரவை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.