கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட பட்ஜெட்: அண்ணாமலை

யோகேஷ் குமார்

நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில், “அடுத்த 5 ஆண்டுகளில் நமது ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த பட்ஜெட் தெளிவுப்படுத்தி உள்ளது” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“10 ஆண்டுகளாக பிரதமர் மோடி வைத்திருக்கும் இலக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்எடுத்துச் செல்லக்கூடிய பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நடக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறுவார்கள். நகர் பகுதிகளில் இருக்கக்கூடிய எழை மக்களுக்கு உதவும் வகையிலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

12 தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சில விஷயங்களே. எனவே மிகச்சிறந்த பட்ஜெட்டை மீண்டும் ஒரு முறை மோடி அரசு அறிவித்துள்ளது.

இது அடுத்த 5 ஆண்டுகளில் நம் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது” என்றார்.