தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

ஒரு ஆலோசகரை நியமித்துக்கொள்வதால் மட்டுமே 100 சதவீதம் வெற்றி கிடைத்துவிடும் என்று கூறமுடியாது.

ராம் அப்பண்ணசாமி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 9) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,

கேள்வி: அதிமுக கூட்டணியில் உங்களுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர வாய்ப்புள்ளதா?

பதில்: நீங்கள் கேட்கும் கேள்விக்கு இன்னமும் ஒரு வருடம் உள்ளது. மார்ச் மாதத்தில்தான் தற்போது இருக்கிறோம். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதனால் பொறுத்திருங்கள், நிச்சயமாக அந்த காலம் வரும்போது உங்களிடம் நாங்கள் அறிவிப்போம்.

கேள்வி: புதிதாக அரசியல் கட்சி தொடங்கினாலும் சரி அல்லது ஏற்கனவே ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சி என்றாலும் சரி, தேர்தல் வியூக வகுப்பாளரை நியமிக்கிறார்கள். அது குறித்த உங்களது கருத்து என்ன?

பதில்: அது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தது. ஒரு ஆலோசகரை நியமித்துக்கொள்வதால் மட்டுமே 100 சதவீதம் வெற்றி கிடைத்துவிடும் என்று கூறமுடியாது. அது அந்தந்த கட்சிகளின் வியூகம். ஆனால் கேப்டனைப் பொறுத்தவரை, அவர் எப்போதுமே மக்களை மட்டுமே நம்பினார். அந்த ஆலோசகர் அவர் போட்டியிட்ட மாநிலத்தில் (பீஹார் – பிரசாந்த் கிஷோர்) வெற்றிபெற்றாரா என்பதே கேள்விக்குறி. அது அந்தந்த கட்சிகளும், அவர்களின் தலைவர்களும் எடுக்கும் நிலைபாடே தவிர, அது குறித்து கூற எதுவும் இல்லை.

கேள்வி: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக, அதிமுக, தேமுதிக அடங்கிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?

பதில்: அது குறித்து இப்போது நாம் கூறமுடியாது. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது நிச்சயமாக அந்த அறிவிப்பு உங்களை வந்துசேரும்.

கேள்வி: மாநிலங்களவை எம்.பி. இடம் தொடர்பான விவகாரம் பேசுபொருளாக உள்ளது. இதை முன்வைத்து, அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே மனவருத்தம் அல்லது சங்கடங்கள் உள்ளனவா?

பதில்: அதுபோல எதுவும் கிடையாது